Latest News

  • சுய உதவிக்குழு கடன்

  • தகுதி

    விவரம்

  • நோக்கம்

    1. மகளிரிடையே ஒற்றுமையை ஏற்படுத்துதல், ஒருமித்த கருத்துடைய 18 முதல் 60 வயது வரைஉள்ள பெண்கள் 12 முதல் 20 வரை என்ற எண்ணிக்கையில் ஒன்றினைந்து தங்களின் முன்னேற்றதிற்காக பணம் சேமித்தல்.
    2. உறுப்பினர்களின் வருமானம் உயர சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துதல்
    3. உறுப்பினர்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்தல்

  • கடன்பெறும் தகுதிகள்

    1. குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 12-க்கு மேல் 20 வரை இருக்கலாம்-20 உறுப்பினர்களுக்கு அதிகமாக இருத்தல் கூடாது.
    2. குழுக்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி குறைந்தது 6 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும்.
    3. குழுக்கள் இதர வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்கியிருப்பின் நம் வங்கிக்கு மாற்றம் செய்யும்போது இதர வங்கியில் சேமிப்புகணக்கு ஆரம்பித்த தேதியிலிருந்தே கணக்கில் கொள்ளலாம்.
    4. குழுவின் நிதியிலிருந்து குழுவின் 50% உறுப்பினர்கள் உட் கடன் பெற்று இருக்க வேண்டும்.
    5. குழுவின் அனைத்து உறுப்பினர்களும் குழுவின் நிதிக்கு தொடர்ச்சியாக சேமிப்பு தொகை செலுத்தி இருக்கவேண்டும்.
    6. குழுவில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உறுப்பினராக இருக்க கூடாது.
    7. சுய உதவி குழுக்களின் கூட்டம் மாதத்தில் இரண்டு கூட்டங்கள் நடத்த வேண்டும். அதில் 75% உறுப்பினர்கள் பங்குகொண்டிருக்க வேண்டும்.
    8. சுய உதவிக்குழு அங்கத்தினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இண்டர் சி அக்ரிமெண்ட் எழுதி அனைத்து உறுப்பினர்களும் அதில் கையொப்பம் இட்டு பட்டுவாடாவிற்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
    9. இதர வங்கிகளில் கடன் ஏதும்பெறவில்லை(சர் ஈன்ங்ள்) என்று சான்று பெற்று இணைக்க வேண்டும்.
    10. குழு கடன் கோரும் தீர்மானம் உறுப்பினர்களின் குடும்பஅட்டை (குழு உறுப்பினர்களின் புகைப்படம்(Group Photo)கடன் மனுவுடன் இணைக்கப்பட வேண்டும்.


apply now*Offer Details | Pricing & Terms
  • குழுக்களுக்கு வழங்கும் பல்வேறு வகையான கடன்கள் மற்றும் கடன் அளவு

  • நேரடிக்கடன்

  • நேரடிக்கடன்

    அ) குழுவின் சேமிப்பு கணக்கில் உள்ள மொத்த நிலுவைத் தொகைக்கு விகிதாச் சார அடிப்படையில் (1:1, 1:2, 1:3, 1:4) கடன் வழங்கப்படவேணடும்.
    ஆ) குழு பற்றிய வங்கியின் மதிப்பீட்டிற்கு ஏற்ப அதிகபட்சம் ரூ.10,00,000/- வரையில் மட்டுமே கடன் அனுமதிக்க வேண்டும்.

    1) குழுவின் காலவரம்பு அடிப்படையிலும் சேமிப்புத் தொகை அடிப்படையிலும் கடன்அளவு நிர்ணயிக்க வேண்டும்.
    2) ஆறு மாதத்திற்கு மேல் ஒருவருடத்திற்குள் ஆனகுழுக்களுக்கு இரண்டு மடங்கு கடன் தொகையும்
    3) 1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் 3 மடங்கும்
    4) 2 வருடம் அதற்கு மேல் உள்ள குழுக்களுக்கு 4 மடங்கு அளவிற்கு கடன் அனுமதிக்க வேண்டும்

    இ) நகரப்பகுதி, கிராமபகுதிகளைச் சேர்ந்த அனைத்து குழுக்களுக்கும், இக்கடன் கிடைக்கும்
    ஈ) இவ்வகை கடனுக்கு மானியம் கிடையாது.

  • வட்டி

    நேரடிக்கடனுக்கு 11.30% வட்டி (அவ்வப்போது வட்டி மாறுதலுக்குரியது.)

  • தவணைக்காலம்

    A) 24 முதல் 36 மாதக்ககாலம் வரை தவணை நிர்ணயிக்கவேண்டும்.
    B) குழுவின் விருப்பம் போல் தவணைக் காலத்தை குறைத்துக் கொள்ளலாம்.


apply now*Offer Details | Pricing & Terms
  • தேசிய ஊரக வாழ்வாதாரஇயக்க திட்டகடன்((NRLM) National Rural Lively Hood Machine)

  • நோக்கம்

    குறைந்த வட்டியில் கடன் வழங்க தேசிய வங்கி ஊக்குவிப்பதின் மூலம் வங்கி கிளைகளின் எல்லையில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களில் நல்ல நிலையில் இயங்கும் குழுவை தேர்வு செய்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் கடன் வழங்குதல்.

  • கடன்தொகை

    ரூ.3.00 லட்சம் வரை மட்டுமே கடன் வழங்கப்படும்

  • வட்டி

    1. தவணைத் தேதி வரையில் 7% வட்டி வசூலிக்கப்பட வேண்டும்.
    2. தவணைத் தவறிய தொகைக்கு கூடுதலாக 6.50% அபராத வட்டி வசூலிக்கப்பட வேண்டும்.

  • திருப்பிச்செலுத்தும்காலம்

    24 மாதம் முதல் 36 மாதக் காலம் வரை திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

  • பொருளாதாரக்கடன்

    அ. குழுக்கள் தொழில்கள் செய்வதற்காக ரூ.5 இலட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
    ஆ. எஸ்.ஜி.எஸ்.ஒய் திட்டம் மூலம் குழுக்களுக்கு அதிகபட்ச மானியம் ரூ.1,25,000/-ஆகும்.
    இ. மேற்படிக் கடன் இரண்டாம் கட்ட தரம் பிரித்தல் தேர்வுபெறும் குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
    ஈ. எஸ்.ஜி.எஸ்.ஒய், தாட்கோ போன்ற திட்டங்களின் மூலம் மானியத்துடன் கூடியதொழிற்கடன் வழங்கப்படுகிறது.
    உ. குழு செய்யவுள்ள தொழிலுக்கு திட்டஅறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும்.
    ஊ. குழு தரம் பிரித்தல், குழு நிதிநிலை அறிக்கை, குழு தீர்மானம், குழு புகைப்படம், கடன் மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
    எ. தொழில் தொடங்க உள்ள இடம், வாடகை இடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தம் இணைக்கப்பட வேண்டும்.
    ஏ. வாங்கவிருக்கும் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கான விலைப்புள்ளி இணைக்கப்பட வேண்டும்.
    ஐ. குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்டர் சி அக்ரிமெண்ட் கையொப்பமிட்டு சரிபார்க்க வேண்டும்.
    ஒ. மான்ய தொகை வங்கிக்கு வரவு வந்த பின்னரே கடன்தொகை விடுவிக்கப்பட வேண்டும். மேலும் மானியம் போக மீதித் தொகைக்க மட்டுமே வட்டி கணக்கிடப்பட வேண்டும்.
    ஓ. CBS –ல் மான்ய தொகைக் கணக்கினை கடன் கணக்கிற்கு இணைக்கப்பட வேண்டும்.

  • சுழல்நிதி காசுக்கடன்

    அ. முதல் கட்டத் தரம் பிரித்தலில் தேர்வு பெறும் குழுக்களுக்கு எஸ்.ஜி.எஸ்.ஒய், தாட்கோ போன்ற திட்டங்களின் மூலம் சுழல்நிதி வழங்கப்படுகிறது.
    ஆ. சுழல்நிதி கடன் ரூ.60000/-வழங்கப்படுகிறது. சுழல்நிதிகளை அதிகபட்ச மான்யம் ரூ.10000/-ஆகும்.
    இ. தலைமையகத்திலிருந்து கடன் அனுமதி பெற்றவுடன் படிவம் 3ஐ பூர்த்தி செய்து மான்யதொகை ரூ.10000 விடுவிக்க கோரி தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கிளை மேலாளர் ஒப்படைக்க வேண்டும்.
    ஈ. சுழல்நிதி காசுக்கடன் கணக்கை ஆண்டுக்கொரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்.
    உ. வட்டி : சுய உதவின் குழுக்களுக்கு வட்டி 12% அபராதவட்டி 2%
    ஊ. சுயஉதவிக்குழுக்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு கடனின் தன்மைக்கு ஏற்ப தவணைக்காலம் மற்றும் வட்டி விகிதம் குழுவே நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
    எ. அனுமதிக்கப்படும் சுழல்நிதி காசுக்கடன் அளவிற்கு மேல் எக்காரணத்தை கொண்டும் பற்று அனுமதிக்க கூடாது.
    ஏ. காசுக்கடன் அனுமதிக்கும் பட்டுவாடா தொகையை சுயஉதவி குழுக்களின் சேமிப்பு கணக்குகளில் வரவு வைத்து பட்டுவாடாசெய்யப்பட வேண்டும்.
    ஐ. மான்ய தொகையினை மைய வங்கி கிளையில் குழுவின் பெயரில் வரவு வைக்கப்பட வேண்டும்
    ஒ. மான்ய தொகை போக மீதம் உள்ள தொகைக்கு மட்டும் வட்டி கணக்கிடப்பட வேண்டும்.


apply now*Offer Details | Pricing & Terms